செய்திகள்

இருமுகனில்  விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை: இயக்குனர் ஆனந்த் ஷங்கர்

வரும் வாரம் வெளியாகவுள்ள இருமுகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று இத்திரைப்படத்தின் இயக்குனார் ஆனந்த்  ஷங்கர் தெரிவித்துள்ளார்.

IANS

வரும் வாரம் வெளியாகவுள்ள இருமுகன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று இத்திரைப்படத்தின் இயக்குனார் ஆனந்த்  ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:

இந்த திரைப்படத்தில் விக்ரம் அகிலன் என்னும் 'ரா' அதிகாரி மற்றும் 'லவ்' என்னும் விஞ்ஞானி ஆகிய இரு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அகிலன் கதாபாத்திரம் கூட எந்த நடிகர் வேண்டுமானாலும் ஏற்று நடித்துவிடலாம்.    ஆனால் 'லவ்' கதாபாத்திரத்தை விக்ரம் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. அந்த அளவுக்கு தனித்தன்மை வாய்ந்த அந்த கதாபாத்திரத்தை விக்ரம் சிறப்பாக செய்துள்ளார்.

படத்தின் ட்ரைலரை பார்த்த அனைவரும் 'லவ்' கதாபாத்திரம் ஒரு திருநங்கை  என்று தவறாக எண்ணி விட்டனர். அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். அனைவரும் விரும்பும் வகையில் அதை நான் உருவாக்கியுள்ளேன். லவ் கதாபாத்திரம் எந்த நேரத்தில் என்ன செய்யும் என்று யாராலும் யூகிக்க முடியாது.

சண்டைக்காட்சிகளை பொறுத்த அளவில் கதையுடன் இணைந்து செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.ரவி வர்மா மற்றும் அன்பறிவ்  ஆகிய இருவரும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமீன்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT